Blog

அனார் கவிதைகள்


2021-11-26 19:54:43

அனார் இந்தகாலத்தில் மிகவும் பிரபலமான கவிஞர் அவர் பற்றி அவர் கவிதை பற்றி சம காலத்தில் நிறைய பேசப்பட்டிருக்கின்றது. அவர் தொகுப்பில்கூட சேரன், சுகுமாரன் போன்ற கவிஞர்கள் அவரைப்பற்றி எழுதியிருக்கின்றார்கள். அவர்கள் அனார் முக்கியமான கவிதை ஆளுமை என்பதை சுட்டிக்காட்டி எழுதியிருக்கின்றார்கள்.   இப்போது நுஃமான் சேரும் அதனை திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார். நாம் சொயய் வேண்டியது அதனை விரிவாக விவாதிக்க வேண்டியதுதான். அதனை விரிவாக விவாதிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அனார் மூடி மறைத்து அலங்கரித்து வைத்திருக்கும் அந்த தங்கக்கூண்டு பற்றி நாம் விரிவாக பேசவேண்டும். அவர் கவிதையில் பூடகமும் அதுதான். அதனை விரிவாக பேசினால் அவர் இன்னும் கடுமையாக வதைக்கப்படலாம் என்ற எண்ணம்தான் வருகிறது. அதனால்தால் அவர் தன் எல்லைக் கோட்டை தாண்டி வருவதில்லை. அவர் நிச்சயமாக கவிதையால் மாத்திரம்தான் தன்னை வெளிப்படுத்தும் போராடும் மனுசி.  அதற்கு வெளியே வரும் கோட்டை அவர் உடைத்து தனது சுதந்திர வானில் பறக்க நம்பிக்கையில்லாதவர். அவர் சுதந்திரத்தை அடைவதற்கு முயன்றால் கொடுக்கும் விலை இன்றைய வேதனையை விட கடுமையானதாக இருக்கும் என்றே நம்புகிறேன். இது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டால் நான் முதலாவது அவரது கவிதை வாசகன், இரண்டாவது நண்பன், மூன்றாவது யாரிடம் அவர் சுதந்திரத்தை பறிகொடுத்தாரோ அந்த சமூகத்தின் பிரதிநிதிகளில் ஒருவன்.

அவர் கவிதை திட்டவட்டமாக நான், நீ என்ற இரு துருவங்களாலானது. அந்த நீ சக பயணி அதேநேரம் இந்த சமூகத்தின் முகம். அதனை திரும்பதிரும்ப எழுதிப்பார்ப்பதுதான் அனாருக்கு வேலை. தொடர்ச்சியாக அதனை 150 கவிதைகளிலும் 150 விதமாக எழுதிப்பார்த்து வெற்றியடைந்திருக்கிறார். முன்னர் இருந்ததைவிடவும் இப்போது அதனை வெளிப்படையாகச் சொல்லும் தைரியும் குறைந்திருக்கிறது. இளமை செல்வதால் தைரியும் குறைந்திருக்கலாம், சமூகத்தில் அந்தஸ்து கூடுவதாலும் ஏற்பட்டிருக்கலாம். பிள்ளைகள் வளர வளரத்தான் தகர்க்க விரும்பும் குடும்பம் எனும் கோட்டைச் சுவர்கள் உயர்ந்து கொண்டு வரலாம். அப்படியான காரணங்களால் இருள்மை விழும் வார்த்தைகளின் செதுக்குதல்கள் மிகவும் அழகானதாக இருக்கிறது. கடுமையான உழைப்புக்கூடிய வேலைப்பாடுகளையுடைய கவிதைகள ; அவை. ஆனால் அவை மனம் இயைந்து இப்பொழுது அவர் மனம் அந்த வேலைப்பாடுகளை மிகவும இயல்பாக செய்கிறார். அவை ஒவ்வொரு படிமமும் மிகவும் கனிந்த மன நிலையில் இருக்கிறது.

இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி
ஓய்விடத்தை நோக்கிப் பயணிக்கின்ற 
சூரியன் மீதும்   
விரைநது; செல்லத் தூண்டப்படும் 
காலைப்பொழுதின் மீதும் 
காற்று வெளியின் 
ஓவ்வொரு துணிக்கையிலும் 
என் வேட்கைகளை எழுதுகிறேன்      
இடிபாடுகளை அதிகாரத்தை 
வெறுமையை எழுதுகிறது காலம்   
வெடித்துச் சரிந்து விழுந்த 
கற் சுவர்களின் புழுதி 
சாக்கால முகத்தை துலக்குகின்றது   
சுற்றியெழுப்பப்பட்ட சுவர்களின் மேலால் 
என்னுடைய பெருமைகள்   
தன்னம்பிக்கைகள்   
சுயமரியாதைகள் வளர்கின்றன 
இணைக்கவும் விடுபடவுமான 
நிர்ணயஙக் ளோடு   
சாபத்தை உடைத்துப் பூத்திருக்கின்றேன்   
மீளும் உரிமை கோரி 
அற்றலை உறுதி செய்து 
என் உள்ளம் திறந்து கொளக் pன்றது  
பூமியில் முடிவற்ற பிரமாண்டமாய்      

அனாரை தனிப்பட்ட முறையில் எனக்குத்தெரியும் சுமார் 10 வருடகாலமாக நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள ; முரண்பட்டக்கொண்டது குறைவு. நேரில் சந்திக்கக்கூடியவனாக இருகிறேன். அவர்போல் வாசிக்கின்ற நண்பர்கள் எனக்கு இலங்கையில் கிடைப்பது அரிது. அவர் நிறைய புத்தகங்களை தேடி வாங்குகிறார். எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்பதைவிட தேர்ந்து நல்லது எது என்று யாரும் அறிமுகம் செய்து வைத்தால் படிக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவர். தீவிரமாக ஓங்கி ஒலிக்கும் குரல்கள் மீது நம்பிக்கையற்றவர். தன்னை இந்த நிலையில் தன் எழுத்து அமைப்பிலிருந்து உடைத்துப் போடுகின்ற படைப்புகளுக்காக ஏங்குகின்றவர். ஆனால் தற்கால எழுத்துகள் எந்தமொழி எந்த நாடாக இருந்தாலும் ஒரு முடிச்சுக் கோர்வையில் இருப்பதுபோலத்தான் இருப்பதாக அலுதது; க்கொள்வார். அதனால்தான ; அவர் தன் மனதை எழுதும் மொழியைக் கண்டுகொண்டார். அவை வார்த்தைகளால் மலர்ந்து கனவுபோல ததும்பிக்கொண்டு இருக்கிறது. யாராவது அவரை கீறும்போது அல்லது அவர் வலியை உணரும்போது அந்த கனவில் மிதக்கும் நினைவை காகிதத்தில் அமர்த்தி விடுகிறார். அவற்றில் இருக்கும் வார்த்தை ஒழுஙகு; அது மனதின் அமைப்பு. அது ஒரு நவீன ஓவியம் போல எண்ணத்தின் நிறம் மற்றும் கோடுகள்.  'பெரும் கடல் போடுகிறேன்' தொகுப்பில் கருமை, நீலம், ஒரேன்ஜ், சிவப்பு, எலுமிச்சை நிறப்பூ, நீலத்தேன் என்று நிறங்களை எழுதும் அளவிற்கு அவர் மனதின் பிரதிபலிப்பை நேரடியாக எழுத்தில் பதியவைக்கும் முறைக்கு வந்திருக்கிறார். அதேபோல அவர் படிமங்களில் இஸ்லாமிய பண்பாட்டின் நிலக்காட்சியும் வந்து விழுகிறது.   

இப்போது அதனை, எல்லா முஸ்லிம் பெண்களைப்போல உருமாற்றத்தொடங்கிவிட்டார். அவர் இபN; பாது எழுதும் கவிதையில் ஒரு சூபி கிழவி போல நடந்துகொண்டு ஹதீத் கலரிக்கும் போவதற்கான நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டதாகவும் தோன்றுகிறது.   அவருடைய இந்த நீண்ட கவிதைப் பயணத்தில் ஒவ்வொரு கவிதையும் முக்கியம்,  இஸ்லாமிய பின்புலத்தில் ஒரு பெண் இளமைக்காலத்திலிருந்து அதனைக் கடக்கும் வரை செய்யும் போராட்டம் எத்தகையது என்பதற்கான சாட்சியம்.   

அனாரின் கவிதைகள ; தனித்தனி படிமங்களாக பார்த்து ஆராய்நத் hல் அவை செய்யும் மாயம் பற்றி மிக நீண்ட கலந்துரையாடலையே செய்ய முடியும். அவருக்கு வார்த்தைக் கற்பனை ஊற்று கொப்பளித்துக்கொண்டிருகிறது.